Sunday, November 30, 2008

கம்யூனிஸ்டைக் காயடித்தார் உன்னிகிருஷ்ணன்

மும்பையில் நடந்த தீவிரவாதத்தாக்குதலில் தம் இன்னுயிர் நீத்த கம்மாண்டோ சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை தான் திரு உன்னிகிருஷ்ணன். பங்களூரில் வசிக்கும் இவரை சந்தித்து இரங்கல் தெரிவிக்க வந்த கேரளக் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் திரு அச்சுதானந்தனை இவர் "வெளியே போங்கடா நாய்களா" என்று விரட்டிவிட்டிருக்கிறார்.

இந்த கம்யூனிஸ்ட் அச்சுதானந்தன் தான் பதவியேற்றதும் செய்த முதல் வேலை கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதான மதானியை விடுதலை செய்யச் சொல்லி தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து வந்தது. இந்த மதானி விடுதலை செய்யப்பட்டதும் சந்தோஷம் தெரிவித்ததும் இந்த அச்சுதானந்தன் தான். கம்யூனிஸ்டுகளுக்கு தேசவிரோத இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் ஊறரிந்த கள்ளக்காதல் இருப்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகியிருக்கிறது இவரது செயல்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இறந்த செய்தி தெரிந்தும், அவர் இறுதி ஊர்வலம் நடக்கும் இடம் மற்றும் காலம் அறிந்தும் அதைப் புறக்கணித்துவிட்டு, ஆறுதல் சொல்ல இரண்டு நாள் களித்து சாவகாசமாக வந்து ஆறுதல் சொல்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ? இஸ்லாமிய ஓட்டுக்கள் தான்.

இஸ்லாமியர் ஓட்டுக்களுக்காக மதானியை விடுதலைச் செய்யச் சொல்லிக் கூறிய இந்தக் கம்யூனிஸ்டு நாயை "நாய்" என்று விளித்து விரட்டியதில் ஒரு தவறும் இல்லை. திரு உன்னிகிருஷ்ணன் ஒரு நல்ல மனிதர், தேசபக்தர் செய்யவேண்டியதைத் தான் செய்திருக்கிறார்.

மேலே சுட்டப்பட்டுள்ள வீடியோ தொடுப்பில் அவர், நாய் என்று விளிப்பதை படம் பிடித்துக் காட்டவும் சொல்கிறார்.

No comments: